Menus

Sornthu pogathe maname சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே (போராட)
கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ
வாக்களித்த தேவனை நீ
பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னை
தாங்க மன்றாடு
துன்பங்கள் தொல்லைகள் உன்னை
சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னை தேற்றும் நேரம்
ஆனந்தமல்லோ
சோதனைகளை சகிப்போன்
பாக்கியவானல்லோ
ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்