Menus

Ennai maravathavare Lyrics


என்னை மறவாதவரே
என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேனைய்யா
நேசர் இயேசய்யா
உயிருள்ள நாளெல்லாம்
நான் நம்புவேனைய்யா

1. தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே
உன்னை எந்தன் உள்ளங்கையில்
வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும்
நினைத்திடுவேனே

2. இமைப்பொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்
மலைகள் விலகி பர்வதங்கள்
நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னைவிட்டு
விலகிவிடாது

3. உன் தாய் உன்னை தேற்றிடும் போல
நான் உன்னை தேற்றிடுவேனே
தண்ணீரைக் கடக்கும் போதும்
உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும் போதும்
கூடவே நடப்பேன்